Numerology: எண் கணிதத்தால், எந்த அளவிற்கு ஒருவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்? என்ற கேள்வி பெரும்பாலானவர்களிடம் உள்ளது.
நிஜத்தில் ஒருவர் ஜெயித்த கதையை இங்கு கூறினால் எண் கணிதத்தின் சக்தியை நீங்கள் உணர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.
அரியானா மாநிலத்தில் யாரும் அதிகம் அறிந்திராத ‘செவ்லி’ என்னும் மிகச் சிறிய கிராமத்தில் 1949ல் பிறந்த அந்தச் சிறுவன் தன்னுடைய 12 வயது வரை காலில் செருப்பு கூட அணிய முடியாத வறுமை நிலையில் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். கல்லூரியில் சேரும் வரை உடுத்திக் கொள்ள பேண்ட் கூட தைத்து அணிய முடியாத பொருளாதார நிலையில் இருந்த அந்த மாணவன், பின்னாளில் 7300 கோடிக்கு அதிபதியானார் என்றால் உங்கள் அனைவரது புருவமும் மேலே செல்லும். அதற்குக் காரணமாக அவர் நியுமராலஜியை கை காண்பித்தார் என்றால் எல்லோரும் ஆச்சரியம் அடைவீர்கள் மேலும் அதிசயிபீர்கள்!
ஆனால் அதுதான் உண்மை. ‘ஆகாஷ்’ என்கின்ற போட்டித் தேர்வுகளுக்கான கல்வி நிறுவனத்தை நிறுவிய உயர்திரு ‘ஜே சி சவுத்ரி’ அவர்களைப் பற்றி தான் இவ்வளவு நேரம் நாம் அறிந்து வந்திருந்தோம்.
என்னதான் தன் திறமையால் படித்து கெட்டிக்காரராக இருந்தாலும் தன்னுடைய வாழ்வையே புரட்டிப்போட்டு கோடீஸ்வரன் ஆக்கிய பெருமை எண் கணிதத்திற்கே உண்டு என்று இந்த உலகத்திற்கு வெளிப்படையாக உரத்துக்கு கூறினார் ஆகாஷ் இன்ஸ்டியூட்டிடை உருவாக்கிய ஜே சி சௌந்தரி அவர்கள். இன்று அவர் அந்த நிறுவனம் கடந்து ஒரு மாபெரும் இடத்தை எட்டிப் பிடிக்க முயற்சித்து எண்கணிதத்தால் பெரும் அளவில் சாதித்தும் காட்டியுள்ளார்.
சௌத்ரி குடும்பம் 300 கோடி ரூபாய்க்கு இரண்டு பங்களாக்களும் மேலும் பல பண்ணை நிலங்களும் வாங்கி குவித்துள்ளன இது தவிர டெல்லியில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் நடத்தி வருகின்றனர் என்றால் இதெல்லாம் எவ்வளவு பெரிய சாதனை!
ஆனால் குரு அருள் இருப்பவர்களுக்கு எண் கணிதம் போன்ற அறிய பொக்கிஷம் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து அவர்களது வாழ்வை வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள முடியும்; மாபெரும் கோடீஸ்வரர்களாக உருவாகவும் முடியும்.
சிந்திப்போம்! சாதிப்போம்!