Skip to content Skip to footer

உங்கள் வாழ்வை வளமாக்கும் கற்பகவிருட்சம், எண் கணிதம்!

ஏதோ பிறந்தோம், எப்படியோ வாழ்ந்தோம் என்று இல்லாமல் நம் வாழ்வில் நாம் சாதித்து காட்ட வேண்டும் என்ற இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.


‘வெற்றி’ என்று சொல்லக் கேட்பது எளிது ஆனால் அதற்கான பயணம் அவ்வளவு எளிதல்ல என்றாலும், சக்திமிக்க எண்கள் உங்களை கைதூக்கிவிட காத்துக்கொண்டிருக்கிறது!ஆனால் அந்த வாய்ப்பு பெற இறைவன் வரம் தர வேண்டும்.


நம் முன்னோர்களில் ஏனையோர் ஞானிகளாகவும் இருந்த காரணத்தால் இந்த மண்ணில் நாம் எல்லோரும் நல்ல வண்ணம் வாழ தங்களது இறை தவத்தால் பல வழிகளை உருவாக்கி வைத்தனர் அதில் ஒன்றுதான் எண் கணிதம்.


இறைவனை வழிபடக்கூட கால அளவை மண்டலமாக கூறி நிர்ணயித்தனர் நம் முன்னோர்கள். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் 4+8 =12 =1+2 = 3.  இங்கு குருவின் ஆதிக்கம் கொண்ட 3ஆம் எண் வருவதை நாம் காணலாம். 
அதேபோல நாம் அன்றாடம் சொல்லவேண்டிய சக்திமிக்க இறை மந்திரங்களை உருவாக்கிய ஞானிகள் அதனை நம் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக 108 முறை ஜெபிக்க கூறினர் 1 + 0 + 8 = 9 ஆம் என் செவ்வாய் கிரகத்தை குறிக்கும்.


அந்த செவ்வாயின் அதிபதியாக ஆறுமுகக் கடவுள் முருகனை அடையாளப்படுத்தினர்.


இன்றும் கூட நம் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த குரு பீடமாக விளங்குவது தனது தந்தை சிவனுக்கே பிரணவப் பொருளை உபதேசித்த முருகனின் திருச்செந்தூர் தலம்.


இப்போது நாம் முன்பு பார்த்த மண்டல கணக்கில் இடம்பெற்ற 48 மூன்றாம் எண் குரு ஆதிக்கத்தில் அமைந்திருப்பதையும் அந்த குருவின் சக்தி 3 மடங்காக பெருகி 9ஆம் எண்ணில் சக்தி பீடமாக உருவாகுவதையும், காரணமின்றி காரியமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
எண்களால் உருவாகும் சக்தி, சர்வ நிச்சயம்மானது.
நமது பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் அதனதன் அதிர்வலைகள் எண்களால் கணக்கிட்டு அதனை உங்களது பிறந்த தேதி மற்றும் கிரக நிலைகளுக்கு பொருத்தமானதாக துல்லியமாக ஆராய்ந்து அமைக்கும் போது உங்கள் பெயர் உங்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும் மந்திரமாக மாறும்.


உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், வியாபார நிறுவனத்திற்கும், மிகப்பொருத்தமான எண்கணித பெயர் அமைந்து மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

 சிந்திப்போம்! சந்திப்போம்!

What's your reaction?
0Cool0Bad0Happy0Sad

Add Your Comment

Call for Free General Consultation