Skip to content Skip to footer

உங்கள் நல்ல தலை எழுத்தை நிச்சயமாக உருவாக்கும்,சக்திமிக்க பெயர் எழுத்து!

கற்றுணர்ந்த மேதைகளும், எண் கணிதத்தை ஏற்றுக்கொண்ட தகவல் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது வாழ்வில் மாபெரும் தனித்திறமைகளால் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு எண்கணிதம் எவ்வாறு துணை புரிந்தது என்று பார்ப்போம்.
‘நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணன்’ மக்கள் அனைவரையும் சிந்திக்க தூண்டிய ஒரு மாபெரும் கலைஞர் என்று கூறினால் நமக்கு உடனே புரியாது; அதுவே N.S.கிருஷ்ணன் அல்லது NSK என்று சொன்னால் உடனே புரிந்து கொள்ள முடியும், அதான் பெயரின் சக்தி.
நம் நாட்டின் ‘சார்லி சாப்ளின்’ என்று பெரிதும் போற்றப்பட்ட ‘என்.எஸ்.கே’ அவர்களின் அந்த மூன்று எழுத்துக்களே மந்திரச்சொல்லாகிப் போனது. என்.எஸ்.கே அவர்களின் பிறந்த தேதி 29.11.1908 தேதியின் கூட்டு எண் (2+9+1+1+1+9+0+8 = 22 , 2+2 = 4) ராகுவுக்குரிய 4ஆம் எண். இந்த நான்காம் எண்ணிற்கு பொருந்தும் வகையில் அமைந்த N S K (5+3+2 = 10) சூரிய ஆதிக்கம் மிக்க 1 ஆம் எண் பெயர் மாபெரும் நீங்காத புகழை கொடுத்தது. 
அதேபோல அகில உலக அளவில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மனதிலும் இடம்பிடித்த ‘டாம் & ஜெரி’, ‘மிக்கி மௌஸ்’ கார்ட்டூன்களை உருவாக்கியவர் ‘வால்ட் டிஸ்னி’ அவர்கள்.
அதுமட்டுமா இவரது ‘டிஸ்னி’நிறுவனம் அன்று முதல் இன்றைய டிஜிட்டல் யுகம் வரைக்கும் நிலைத்ததோடு நில்லாமல், 22 ஆஸ்கார் களையும் மேலும் பல உலகளாவிய உயர் விருதுகளை அள்ளி குவித்துள்ளது. 
இவருடைய முழு பெயர் 8 ஆம் எண் ஆதிக்கத்தில் அமைந்த ‘வால்டர் எலியட் டிஸ்னி’ ஆனால் அகில உலக அளவில் புகழ் வாங்கிக் கொடுத்த பெயர் ‘வால்ட் டிஸ்னி'(WALT DISNEY) . இந்தப் பெயர், சுக்கிரனின் ஆதிக்க காந்த சக்தி கொண்ட 33ஆம் எண் ஆகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய பெயர் தான் அவர்களின் முதல் அடையாளம்.
அப்படிப்பட்ட பெயர் அவர்களது பிறந்த தேதி, தேதியின் கூட்டு, எண், பிறந்த நேர கிரக நிலைகள் என அனைத்தையும் ஆராய்ந்து அதி துல்லியமாக அமைக்கப்படும்பொழுது, செல்வந்தர்களாக மட்டுமல்ல சாதனையாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். 
நேற்று வந்து சென்ற மஹாளய அமாவாசை தினம் நம் முன்னோர்களின் ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத் தந்தது! அப்படி கிடைத்த முன்னோர்களின் ஆசீர்வாதங்களே இன்று உங்களுடைய பெயரை சரிபார்த்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்துள்ளது என்று சர்வ நிச்சயமாக சொல்லலாம்!
 உங்களுக்கும், உங்களுடைய குழந்தைகளுக்கும், தொழில் ஸ்தாபனங்களுக்கும் பொருந்தும் சக்திமிக்க பெயர்கள் அமைந்து வாழ்வில் பெரும் வெற்றி பெற்று நீங்களும் சாதனையாளர்களாக வாழ்த்துகிறேன்.


சிந்திப்போம்! சந்திப்போம்! சாதிப்போம்!

What's your reaction?
0Cool0Bad0Happy0Sad

Add Your Comment

Call for Free General Consultation