Skip to content Skip to footer

உங்கள் கனவுகளை நிஜமாக்கும் சக்திமிக்க எண்கள்!


நீங்கள்,

*நினைத்தது நடக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவரா?

*முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என ஏங்கி தவிப்பவரா?  

*நாம் பட்ட சிரமங்கள் நம் குழந்தைகள் அனுபவிக்காமல் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவரா? 

*வியாபார வளர்ச்சி பெற்று பொருளாதார அந்தஸ்து உயர்வு பெற வேண்டும் என்று நினைப்பவரா?

உங்கள் அனைவருக்கும் அற்புதமான அந்தஸ்து தர காத்திருக்கிறது எண்கள்.
அதிர்ஷ்ட எண்களால் உங்களது பெயர் சக்திமிக்க மந்திரமாக மாறி வெற்றிக்கான பாதையில் உங்களை அழைத்துச் செல்ல இறைவன் வரம் அளித்து விட்டார்!

வெற்றிபெற்ற ஏனையோர் தங்களது வாழ்வில் உயர்வதற்கும் தங்களுடைய பெயரும் காரணமாக இருந்ததை உணர்ந்தே உள்ளனர்.

ஒவ்வொரு மனிதப் பிறப்பின் முதல் அடையாளம் அவருடைய பெயர் தான்; அதுவே இறுதி வரைக்கும் தொடரும் மந்திரமாகும். 
 வெற்றி பெற்ற மனிதர்களை இன்றும் நாம் “பெயரும் புகழும் அடைந்துவிட்டார்” என்று பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தே கூறுகின்றோம். அப்படிப்பட்ட பெயர் உங்களுடைய பிறந்த தேதி மற்றும் பிறப்பு நேர கிரகங்களுக்கு பொருந்தும்படி அமையும் பொழுது அந்த பெயரே, வாழ்வை வளமாக்கும் சக்தியாக மாறி விடுகிறது. கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட எண்கணித கலையை உபயோகித்து இன்றுவரை பல சர்வதேச நிறுவனங்கள் கூட தங்களது நிறுவன பெயரில் சிறு சிறு மாற்றங்கள் செய்து மாபெரும் வெற்றி கண்டுள்ளனர்.

அன்று முதல் இன்று வரை தரத்தில் தனக்கென்று தனி இடம் பெற்றுள்ள சோனி (Sony) நிறுவனம் 1946 முதல் 1957 வரை டோக்கியோ சூஷின் கோகியோ (Tokyo Tsushin Kogyo) என்று அழைக்கப்பட்டது ஆனால் வெற்றி தந்தது சோனி என்கின்ற பெயர்.

மிக உயர்வான தரம் மற்றும் விலை கொண்ட ஆப்பிள் கணினி மற்றும் போன் நிறுவனம் 1977 வரை ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி (Apple Computer Company)என்ற அழைக்கப்பட்டது. தனது நிறுவன பெயரை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் இன்க் (Apple Computers Inc)என்று மாற்றிக் கொண்ட பின் இன்றுவரை தன்னிகரற்ற பெரும் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளது.

இது போன்ற உதாரணங்கள் மூலம் எண்களின் சக்தி பற்றி நாம் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.

கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டிடக்கலையில் மாபெரும் மேதையான ஒருவர் எண் கணிதத்தின் அருமையை உணர்ந்து கொண்ட பின் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தானறிந்த சான்றோர்களும் அறிவித்தார்.
அடுத்த கட்டுரையில் அது பற்றி விரிவாக காண்போம்.

உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், வியாபாரத்திற்கும் முன்னேறக் கூடிய ஏற்ற காலம் வந்துவிட்டது! வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

சிந்திப்போம்! சந்திப்போம்!

What's your reaction?
0Cool0Bad0Happy0Sad

Add Your Comment

Call for Free General Consultation